எல்லாம் இருந்தும்/லாவண்யா சுந்தரராஜன்


 
சுற்றுச் சுவரோடு
வாசல் இரும்புக்கதவில்
அஞ்சல் இட ஒரு பெட்டி

அன்றாடம் ஓடும்
தண்ணீர் மின்னியக்கிக்கு
தகரத்தால் ஆன சிறு வீடு

பிரிய ரங்கனின் விதவிதமான
புகைப்படங்களுடன்
ஏனைய கடவுளர்க்கும்
மணி கதவம் கொண்ட
பெருமாள்படியுள்
அலங்கார பொம்மைகளுக்கு
வரவேற்பறையில் ஒரு ஓரிடம்

செல்ல நாய்க்கு
மாடிப் படிக்கட்டுக்கடியில்
சிறு குடியிருப்பு

குப்பைத்தொட்டிக்கு கூட
சமையலுள்ளில்
கதவோடு இடம் ஒன்று

தாளிக்கும் கடுகுக்கும்
அஞ்சறைப் பெட்டியில் இடம்

காலணிகளை வைக்கவோ
ஷூ ராக்

எல்லாவற்றுக்கும் இடமிருக்கிறது
வயதேறி குழந்தையான
பெற்றோர் தவிர

One Comment on “எல்லாம் இருந்தும்/லாவண்யா சுந்தரராஜன்”

Comments are closed.