மௌனம்/க.நா.சு.

எதையோ வேகமாகப் பேச ஆரம்பித்ததும்
பாதியில் நிறுத்திவிட்டு மௌனமாக இருந்தேன்.
என்ன சொல்ல வந்தேன் என்று
எனக்கே நினைவில்லை; மேலே சொல்லி
வேண்டியதின்னது என்று தெரியாமல்
நான் விழித்துக் கொண்டிருக்கையில்
அவன் மனத்திலிருந்ததை வார்த்தைகளில் கொட்ட
ஆரம்பித்தான். பாதி வாக்கியத்திலே
நிறுத்திவிட்டு அவனும் மௌனமானான்.
இருவரும் பேசியது ஒருமுழு வாக்கியமாகவில்லை,
ஆனால் பேச்சுத் தேவையில்லை;புரிந்து கொண்டோம்.
மறுபடி சந்திப்பதெப்போதோ! சந்தித்தால்
வாக்கியங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
சந்திக்காவிட்டால் மௌனம் நீடிக்கட்டுமே!