இலக்கிய இன்பம் 66/கோவை எழிலன்

எங்கள் குலதெய்வம்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் இருப்பதுண்டு. பெரும்பாலும் அவை முன்னோர் வாழ்ந்த ஊரின் அருகில் கோயில் கொண்டிருக்கும் இறைவனாகவே இருக்கும். ஆனால் இறைவனை விட அடியார்களைக் கொண்டாடும் திருமங்கை ஆழ்வார் அடியார்களையே தன் குலதெய்வம் என்கிறார்.

திருக்கடல் மல்லை என்னும் மாமல்லபுரத்தில் ஸ்தலசயனப் பெருமாளைப் பாடும் போது வீரர்களின் ஆவியை விலங்குகள் உண்ணுமாறும் மங்கையர் விரும்பும் இராவணனின் மார்பு, தீயில் விழும்படியும் போர் செய்தவனான இராமபிரான் இங்கு ஸ்தல சயனப் பெருமாளாக எழுந்தருளி இருக்கிறார். அவரைக் கொண்டாடும் உள்ளம் கொண்டோரே எனக்கு குலதெய்வம் ஆவார்கள் என்கிறார்.

“விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத்துறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையாரவர்கள் எங்கள் குலதெய்வமே”