துளி 257/அழகியசிங்கர்

இரண்டு புத்தகங்களைத் தயாரித்துவிட்டேன்

டிசம்பர் மாதம் வந்தாலே புத்தகக் கண்காட்சி ஞாபகத்திற்கு வரும்.  அந்தத் தருணத்தில்தான் அவசரம் அவசரமாகப் புத்தகங்கள் தயாரிக்க முடியும்.
இந்த அவசரத்திற்கு ஒவ்வொரு முறையும் ஈடு கொடுக்க முடியாமல் தவிப்பேன்.
போன வருடம் இதே டிசம்பர் மாதம் நான் ஆறு புத்தகங்களைத் தயாரித்தேன்.
இந்த முறை இதுவரை இரண்டு புத்தகங்களைத் தயாரித்துள்ளேன்.
எல்லாம் தயார் நிலையில் வைத்திருந்தாலும் சுறுசுறுப்பாகத் தயாரிக்க முடியாத நிலை.
சில மாதங்கள் கண் பிரச்சினையால் நான் தீவிரமாய் ஈடுபட முடியவில்லை.
எப்படியோ இரண்டு புத்தகங்களைத் தயாரித்து விட்டேன்.  சமீபத்தில் நான் 400 கவிதைகளைத் தொகுத்து அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகத்தைச் செப்டம்பர் 2021ல் கொண்டு வந்தேன்.
அதன்பின் தொடர்ந்து நான் எழுதிய கவிதைகளை நூறாகத் தொகுத்து 'வெற்றிடம் எதற்கு?' என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.
இந்தப் புத்தகத்திற்கான அட்டையில் என் பேத்தியின் ஓவியத்தைச் சேர்த்துள்ளேன்.
இரண்டாவது புத்தகம் 'கவிதையும் ரசனையும்.'  இதுவும் நான் ஒவ்வொரு வாரமும் எழுதிய கட்டுரைகளின்  தொகுப்பு. புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன் என் இலக்காக 6 புத்தகங்களைக் கொண்டு வர வேண்டும்.