மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதை

பச்சைப் புடவை சுற்றி
பஞ்சுத்
தலை விரித்து,’ என்ன
உலகமிது?
நல்ல காய், உரித்த
பருப்பு
வாங்கிச் சமைப்போர்
இல்லையோ??
என்றே கை விரித்து
அங்கலாய்க்கும்
முதியவள் முகம் பார்த்து
வதங்கும்
நடைபாதை விரித்த கடை.