ஆர்க்கே

சுமைகள் வலிகள்
பிடிமானங்கள்
உதறத் துவங்கியபின்
மனசு லேசாகிறது.
புதிய வானம் விரிகிறது.
பறத்தல் வசப்பட வசப்பட
வானமே புதிய பூமியாகி
காற்று வெளியிடை
அற்றது பற்றெனின்
உற்றுநோக்கலில்
பெற்றது ஒரு ஞானவானம்.
ஆர்க்கே

சுமைகள் வலிகள்
பிடிமானங்கள்
உதறத் துவங்கியபின்
மனசு லேசாகிறது.
புதிய வானம் விரிகிறது.
பறத்தல் வசப்பட வசப்பட
வானமே புதிய பூமியாகி
காற்று வெளியிடை
அற்றது பற்றெனின்
உற்றுநோக்கலில்
பெற்றது ஒரு ஞானவானம்.