கோவை எழிலன்

இலக்கிய இன்பம் 5
திருமூலரின் திருமந்திரத்தின் பல பாடல்கள் மறைபொருள் கொண்டவையாக இருந்தாலும் முதல் ஆறு மந்திரங்களின் பாடல்கள் உலகியல் வாழ்க்கைக்கு வழிகாட்டும் எளிய கருத்துகளை முன்வைப்பன.
அவற்றில் ஒன்று இறைவனுக்கு உகந்த செயல்களை அறிவிப்பது
உன்னால் முடியுமென்றால் வில்வ இலைகளைக் கொண்டு சிவ பூஜை செய். இல்லையென்றால் பசு மாட்டைக் கண்டு அதற்கு ஒரு புற்கட்டை உணவாக அளி. அதுவும் இல்லையென்றால் உண்ணும் போது ஒரு பிடி உணவை தானமாக மனிதர்களுக்கோ மாக்களுக்கோ பறவைகளுக்கோ அளி. இவை எதுவுமே முடியவில்லை என்றால் கொடுஞ்சொற்கள் விடுத்து இன்சொற்கள் பேசிவதை வழக்கமாகக் கொள். இது கண்டிப்பாக முடியும்.
“யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை;
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே”

ஈதல் இசைபட வாழ்தல் என்னும் நன்னெறிக்கு வழிகாட்டும் மூல மொழி .
முனைவர் சலீம் , சிங்கப்பூர்