நாலடி பாய/க. நா. சு.

நாலடி பாய எட்டடி பதுங்கி
இருபதடி பின்வாங்கி நூறடி முன்னேறி
முன்னும் பின்னும் இறுக்கி முரண்பட்டு
நேர்படுத்தி முடிச்சில் சிக்கித் தவிப்பவன்
மனிதன்.