
ஒவ்வோர் அணுவும் ஒவ்வோர் உயிரும்
கடவுள் எழுதும் கவிதையே
ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம்
வெவ்வேறு முகம் வெவ்வேறு நிறம்
உள்ளே இருக்கும் ஒளியைப் பார்த்தால்
அனைத்தும் இங்கே ஒரே தரம்
ஒவ்வோர் அணுவும் ஒவ்வோர் உயிரும்
கடவுள் எழுதும் கவிதையே
வெண்பா உண்டு விருத்தம் உண்டு
சானட் உண்டு வசனம் உண்டு
காப்பியமாக நீளும் ஒன்று
ஹைக்கூவாக முடியும் ஒன்று
ஒவ்வோர் அணுவும் ஒவ்வோர் உயிரும்
கடவுள் எழுதும் கவிதையே
வடிவை மட்டும் ரசித்திருந்தால்
முடிவை எப்படி ரசிப்பது
முடிவை ரசிக்கக் கற்றுக் கொண்டால்
முடிவில் நிறைய முடியும் என்றால்
முடிவும் முதலும் இல்லாததுவாய்
முழுமைக் குள்ளே வசிப்பது
முழுமுதலை தரிசிப்பது
24-12-2022
