இயேசு பிரான் /சாந்தி

ஒளிமயமாக பிறந்த மகான்!
எளிமையாக பிறந்த மகான்!
ஆடுகள் இடையே பிறந்து
கூறாமல் கூறியது சமத்துவம்!
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை காட்டி
நிறுவியது சமாதானம்!
“தவறே செய்யாதவர் மட்டும் எறியுங்கள்
கல்லை விலைமாதுமீது” நாட்டியது நீதியை!
கண் ஒளி கொடுத்து திறந்தது
உண்மையில் ஞான ஒளியே!
முடவனை நடக்க வைத்தது
மனதால் முடமாகாதே மூடமதே
என்று கூறத் தான்!
என் ரத்தமும் சதையும் உமக்கே,
என் மடி நீ இளைப்பாற,
முள் முடி சூட்டினாலும்,
கல் அடித்து கொன்றாலும்-என்
உள்ளம் என்பது உள்ளவரை
உமக்காக மன்றாடும் இறைவரை!
உதாரணமாக வாழ்ந்து காட்டிய எம் பெருமான்!
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு
இருபத்தொரு நூறாண்டுகள்
கடந்தாலும் கொண்டாடுதல்
வியப்பில்லை காணீர்.

2 Comments on “இயேசு பிரான் /சாந்தி”

Comments are closed.