பாபா அளிக்கும் 108 நல்முத்துக்கள்

ஜெ.பாஸ்கரன்

“இங்கு யாரும் இல்லாத காலத்திலும் நான் இருந்தேன்…. நீ இங்கே இருக்கும்போதும் நான் இருக்கிறேன்…. இங்கே யாரும் இல்லாமல் போனாலும் நான் இருப்பேன்…. நான் நிரந்தரமானவன்…. எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவன்…. நிரந்தரமாக வாழ்பவன்…. உன் பாபா எப்போதுமே உயிரோட்டத்தோடு வாழ்பவன்….”. – (முத்து 108).

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு செய்திருந்த “பாபா அளிக்கும் 108 முத்துக்கள்” (108 pearls of BABA SAI – A legacy Received in Trances – Di Jaan Jaya Wahi) – புத்தக வெளியீட்டு விழா வித்தியாசமாக நடந்தது. வித்யா வாணி சங்கீத வித்யாலயா மாணவ மாணவிகளின் சாய் பஜனுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மிகவும் இனிமையாகவும், ஒருமித்த பக்தியுடனும் பாடிய பாடல்கள் நிகழ்ச்சிக்கு ஓர் இனிமையான துவக்கமாக அமைந்தன. மேடையின் ஓரத்தில் மலர் மாலையுடன் ஷீரடி பாபாவின் படம். அருகில் குத்துவிளக்கை நூலாசிரியர் ஜெயா வாஹி ஏற்ற, இறை வணக்கப் பாடலுடன் விழா துவங்கியது.

அனைவரையும் வரவேற்றுப் பேசியவர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி அவர்கள். அன்பு ஒன்றே அனைவரையும் ஆட்கொள்ளும் பக்தி. அன்புச் சகோதரி ஜெயா வாஹியின் ஆத்மார்த்த அனுபவத்தில், ஶ்ரீ ஷீரடி சாய்பாபாவுடன் உரையாடியதிலிருந்து 108 முத்துக்களைக் கோர்த்து இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பதாகக் கூறினார். அதிலிருந்து 51 வது முத்தினைப் பற்றி பக்திபூர்வமாகப் பேசினார். ”வெறும் நீர்த்துளி, பரந்த சமுத்திரத்தில் கலந்து விட்டால், அதுவும் அந்த சமுத்திரமாகவே ஆகிவிடுவதைப் போல, தனியாக இருக்கும் நீ, அன்பு, பிராரத்தனை, தியானத்தின் மூலம் என்னுடன் இணையும் அதே கணம் நீயும் என்னுள் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறாய். உன்னைத் தொலைத்து என்னைக் காண்பது எத்தனை அற்புதமானது!” என்பதனை அழகாக எடுத்துரைத்தார்.

மதுராஷ்டகத்தில் கண்ணன் சம்பந்தப்பட்டவை அனைத்துமே இனிமை என்பதைப்போல, பாபாவின் பக்தர்களுக்கு பாபா சம்பந்தப்பட்ட சர்வமும் இனிமையானதுதான், பரவசம் தருவதுதான் என்று குறிப்பிட்ட மூத்த எழுத்தாளர் சிவசங்கரி, இப்புத்தகத்தை பாபாவின் ஆசியோடு தமிழாக்கம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். (முன்னதாக SAI BABA IS STILL ALIVE புத்தகத்தை, சாயி பாபா இன்னமும் வாழ்கிறார் என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார் – அந்தப் புத்தகமும் அன்று கிடைத்தது!) புத்தகத்திலிருந்து ‘என் பாபாவுக்கு…. என்ற அன்பு நிறைந்த ஒரு கவிதையை உணர்ச்சிபூர்வமாக வாசித்தார் சிவசங்கரி. 2005 ஆம் ஆண்டு ஜெயா வாஹிக்கு சாய் பாபாவுடன் கிட்டிய ஆன்மீக அனுபவத்தின் போது எழுதப்பட்டது இந்தக் கவிதை – “பனித்துளியும் அவர்தான்… மேகமும், மரமும் அவர்தான்… அவரே சந்திரன், நட்சத்திரங்கள், விண்வெளி… பாபா! என்னுடைய புன்னகை, என்னுடைய கண்ணீர், என்னுடைய இருதயம், என்னுடைய ஆன்மா அனைத்தும் நீங்கள்தான்!! ஆயுசு பரியந்தம் உங்கள்பால் அன்பும், பக்தியும் செலுத்துவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்….” என்பதான இந்தக் கவிதையை சிவசங்கரி வாசித்தபோது, அரங்கம் ஆழ்ந்த அமைதியில் நெகிழ்ந்து கிடந்தது!

ஜெயா வாஹி டில்லி சர்வகலாசாலையைச் சார்ந்த ஶ்ரீராம் கல்லூரியில் படித்தவர். கிராண்ட் மாஸ்டர் யூஸாய் வழியில் ரேக்கி பயின்றவர். ஷீரடி சாய்பாபாவிடம் ஆத்மார்த்தமான பக்தி கொண்டவர். வேதாந்தம் பயின்றவர். இவர் ஒரு ‘நியூரோ லிங்க்விஸ்டிக் ப்ரோகிராமிங்’ பயிற்சியாளர். அன்பு சகோதரி என்று அனைவராலும் அழைக்கப்படும் ஜெயா வாஹி, பாபாவின் கருணையாலும், அருளாலும் கணக்கில்லா மனிதர்களின் துயரங்களைப் போக்கும் கருவியாக இருந்து வருகிறார். 2014 ல் ‘சாய் பாபா இன்னமும் வாழ்கிறார்’ (சாயிபீஸா) என்ற தர்ம ஸ்தாபனத்தை ஆரம்பித்து, அடித்தட்டு மக்களுக்குத் தேவையான உணவு, இடம், கல்வி ஆகியவற்றை மிகச் சீரிய முறையில் கொடுத்து வருகிறார். இவருடைய புத்தகங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தனது சிறப்புரையில் ஜெயா வாஹி, “எதையும் எதிர்பார்க்காத அன்பை எல்லா உயிரினங்களிடமும் செலுத்த வேண்டும். பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றுதான்” என்றார். எல்லாம் என்னிடம் இருந்தாலும், மனதில் அமைதியின்மை ஏன் வருகிறது என்ற கேள்வியை எழுப்பினார். ‘ஆன்மாவிலிருந்து தனித்திருக்கும் உடல்… தேட வேண்டியது இறைவனாய் இருக்கும் தன் ஆன்மாவை… வாழ்க்கை சாகரத்தைக் கடந்து, ஆன்மாவும், இறைவனும் ஒன்றாகும் புள்ளியை – கடலும் வானும் ஒன்றாய் இணையும் புள்ளியை – அடைவதே உண்மையான அமைதி, பரவசம். அதற்கு உன்னை அழைத்துச் செல்லும் குருவை பற்றிக்கொள்… குருவன்றி – பாபா இன்றி – அது இயலாத காரியம்!’

“இவை உங்களை உய்விக்க வந்த நல்முத்துக்கள். என்னுடைய ஜபமாலையில் இருக்கும் முத்துக்கள்…உங்களுடைய ஒவ்வொருவரின் சந்தோஷத்திற்கும், நற்கர்மாவுக்கும், முக்திக்குமான நல்வழியை இந்த முத்துக்கள் உங்களுக்குக் காட்டும்…” என்கிறார் ஜெயா வாஹி.

முரளி அவர்கள் சுருக்கமாக நன்றி கூற, வாழிய செந்தமிழ் பாடி விழா நிறைவடைந்தது.

விழாவில் சில முத்துக்கள்:

புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டவர் தமிழ் நாட்டின் மாண்புமிகு முதல்வர் அவர்களின் துணைவியார் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள். மற்றும் நல்லி செட்டியார், திருப்பூர் கிருஷ்ணன், திரு ரவி, திருமதி கலாமுரளி, திருமதி அகிலா ஶ்ரீனிவாசன், திருமதி உலகநாயகி ஆகியோரும் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

ஜெயா வாஹி சாயி நாமத்தைப் பாட, எல்லோரும் உடன் பாடினர்.

அன்று 300 ரூபாய் மதிப்புள்ள எல்லா புத்தகங்களும் 180 ரூபாய்க்குக் கொடுக்கப்பட்டன.

ஷீரடி துவாரகமாயி யில் இருக்கும் அதே பாபாவின் படம் ஒன்று எல்லோருக்கும் வழங்கப்பட்டது.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்ப்பா, மிக்ஸர் பாக்கெட் எல்லோருக்கும் வழங்கப்பட்டது!

ஜெ.பாஸ்கரன்.

+3

14Hariharan Narayanan, Viswanathan Meenakshisundaram and 12 others

3 comments

Like

Comment