
என் பள்ளிக்காலங்களில்
மேடையில் கடவுள்வாழ்த்து
பாடும் வேளையில்
என் செந்நாக்கு ஒளியைப்போல்
பிரகாசிக்கும்.
தேவனின் கருணையால்
நட்சத்திரத்தைப்போல்
பிறர் விழிகளுக்குப் புலப்படுவேன்.
அவன் கருணையால்
இன்றும் நான் ஒரு நட்சத்திரம்.
துடித்துக் கொண்டிருக்கும்
அவன் செந்நிற இதயம்
என்னிடத்தில் சேரும் பரிசுத்தத்தைப்
பெற்றவளைப் போல்
உணர்ந்திருப்பேன்
சுவர் முழுவதும் ஒலி சிதறி
ஒளிரூபமாய் இயேசு எழுத்தருளிய
செய்தி
சாளரத்தின் வழியே
கசியும் சூரியொளியில்
எப்போதெல்லாம் அதிரூபனை
செந்நாக்கு எழுப்புகிறதோ
அப்போதெல்லாம் நட்சத்திரமாகி
விடுகிறேன்.
