எங்கு செல்கிறீர் இறைத்தூதரே? (Quō vādis?)/முருகு

பாவங்கள் சுமந்து…
பாவிகள் மன்னித்து…

பரிசுத்த ஆவியாய்…
பறந்து செல்கையில்…

சிலுவைக்குப் பயந்தோடும்
சீடர் பீட்டர் வினவுகிறார்…

“எங்கு செல்கிறீர்
இறைத் தூதரே?…”

“சிலுவையில் அறைபடவே
செல்கிறேன் சீடனே!!!”

புன்னகை மலரப்
புனிதர் சொல்கிறார்…

“எத்தனைமுறை மரித்தாலும்
எழுவேன் என் மக்களுக்காக…

மீண்டும் சிலுவையிலிட்டாலும்
மீள்வேன் நான் இவர்களுக்காக!

பாவம் இவர்கள்; தாங்கள்
பாவிகள் என்றறியாதவர்கள்…

சுத்திகரிக்கிறேன் என்
ரத்தத்தால் இவர்களை…

இன்று நான் பிறந்ததாய்
இவ்வையம் கொண்டாடுகிறது

அன்பு பிறக்கும் நாளெல்லாம்
அடியேன் பிறந்த நாள் தானே”