
ஏன் இந்த பார பட்சம்?
வயிறு புடைக்க
நிதம் மூன்று வேளை
ருசித்து உண்ணுபவர்,
நமக்கு அன்னம் அளிப்பது
மாதம் ஒரு நாள்
அமாவாசை அன்று மட்டும்.
நாமென்ன ஒட்டகமா
ஒரு மாத உணவை
சேமித்து உண்ண !
காக்கை குருவி எங்கள் ஜாதி
எனும் பாரதி சொல் மறந்தனரோ
கரைந்தது காகம்.


ஏன் இந்த பார பட்சம்?
வயிறு புடைக்க
நிதம் மூன்று வேளை
ருசித்து உண்ணுபவர்,
நமக்கு அன்னம் அளிப்பது
மாதம் ஒரு நாள்
அமாவாசை அன்று மட்டும்.
நாமென்ன ஒட்டகமா
ஒரு மாத உணவை
சேமித்து உண்ண !
காக்கை குருவி எங்கள் ஜாதி
எனும் பாரதி சொல் மறந்தனரோ
கரைந்தது காகம்.
