
சிலேட்டைக் கவிழ்த்துக் கொண்டு
மழையில் நனைந்து வருகையில்
சத்தமில்லாமல் பின்புறமாய்
விரிந்த அப்பாவின் குடை.
கொளுத்தும் வெயிலில் தார்ச் சாலையில்
நடக்கையில்
ஓடி வந்து விரிந்த நட்புக் குடை.
திடீரென்று பெய்த மழையில்
திகைத்து நிற்கையில்
கண் சிமிட்டி அழைத்த காதல் குடை.

இடுப்பில் குழந்தையும் கையில் பையுமாய்க்
குடை விரிக்கத் திணறுகையில்
எரிச்சலுடன் விரிந்த கணவனின்
அதிகாரக் குடை
நினைவில் நின்று நெஞ்சைப்
பிசைவதென்னவோ
வெள்ளத்தில் மிதந்து வந்த
கௌசிப் பாட்டியின் பொத்தல்
குடையும் ஜவ்வு மிட்டாயும்.

Arumai..thodarthu ezhutha vazhthukkal
முதல் பாராவும் கடைசி பாராவும் எதையும் எதிர்பார்காகாத குடைகள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Mikka nanru.
Short and sweet
மனதை தொடும் கவிதை
Romba azhagaaga irukkiradhu, Aunty.
Excellent words. Simple and sweet . Beyond appreciation. Wonderful imagination
அருமை. அதிகார குடை, போதல் குடை மிகவும் சிறப்பு. வாழ்துக்கல்.
மென்மையான உணர்வு
மனதில் பதிந்த நினைவு
கவிதை வடிவில்…
மிக நன்று
🎤👌அப்பாவின் குடை,
நட்புக் குடை,
காதல் குடை,
பொத்தல் குடை.
இந்தக் குடைகளெல்லாம்
பரிவோடும் பாசத்தோடும்
பாவத்தோடும்
வரும் போகும், ஆனால்
அதிகாரக் குடையோ
வந்த நாள் முதல்
சுருங்கியும் விரிந்து கொண்டும்
கூடவே பயணிக்கிறதே!?
மிக்க அருமை. நல்ல கற்பனை வளம். வாழ்த்துகிறேன்.
மழை தொடருட்டும்
Excellent words
Simple and sweet
An ordinary umbrella has so many faces in various situation beyond appreciation great effort
Keep get going👍
குடைக்குள் மழை அருமை ☔☔☔☔☔
பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி