கருணை புரியவும்/அழகியசிங்கர்

ஓ….பரம பிதாவே
உன் கருணையை
எதிர் பார்த்து
நிற்கிறேன்

வரும்
புத்தகக் காட்சியில்
நான்
கொண்டு வந்திருக்கும்
அல்லது கொண்டு வரப்போகும்
புத்தகங்கள்
எல்லாம் நூறு
சதவிதம் விற்க வேண்டும்

எல்லோரிடமிருந்து
என் புத்தகங்கள்
பற்றி மட்டும்
பேச்சாக இருக்க வேண்டும்

ஆஹா..ஓஹோ…
என்று
எல்லோரும் புகழ
வேண்டும்..

ஆமென்…ஆமென்..