கி.வா.ஜ.*/க நா சு

கி.வா.ஜ.வை
நான் இலக்கிய அளவில்
மதிக்க மாட்டேன். அவருக்குத்
தெரிந்தது எனக்குத் தெரியாது
என்று ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் அவருக்கு நான்
கடன்பட்டவன். 1938-ல்
எனக்கு ராயர் கபேயை –
கச்சேரித் தெரு மைலாப்பூரில் –
காட்டித்தந்தார். இப்போதும்
பலசமயம் திருப்தியாக ரவா தோசை சாப்பிடப்
போய் வருகிறேன்.
7.11.1988

(கி வா ஜ 19.11.1988 அன்று 82 வயதில் மரணமடைந்தார் )