சுயம்பாகம்.!


ஆர்க்கே

கட்டித்தயிர்
பக்கத்துப்பெட்டிக்கடையிலிருந்து.!

வெறுமே இட்டதோ
லேசாய் சுட்டதோ
உடனடி சப்பாத்தி
அண்ணாச்சிகடை முன்னடுக்கு
மேசையிலிருந்து.!

உப்பிடப்படா
இட்லி தோசைமாவு
பூக்காரிகடையில் கூட
ஞெகிழிப்பந்துள் வீற்றிருக்கும்.

ஊறுகாய் தொக்கு
வத்தல் வடக அப்பளமெல்லாம்
இட்டுப்பரப்பி
காகம்விரட்டிக் காயவைத்தெடுக்க
இடமுமில்லை சுற்றமுமில்லை
எல்லாம் கிடைக்கிறது கடைகளில்.

காயும் கூட்டும் ரசமும் சாம்பரும்கூட
தனியே தரப்படும் வீட்டுக்கதவு தட்டி.

நளபாக பிரயத்தனங்கள்
இனி  தேவைப்படாது.
உலையில் அரிசி மட்டும்
வேகவைக்க தெரிஞ்தால் போதும்-
அன்றாடம் நிறைந்துவிடும்.

One Comment on “சுயம்பாகம்.!”

Comments are closed.