அதோர்../கேள்விக்காரன்…

அதோர்
அதிசய
அரங்கம்

மிகவும்
சிறிய
குழுமல்

எட்டுக்கு எட்டு
குச்சறையில்
பத்து பேர்
இருக்கலாம்

ஒருவரை
ஒருவர்
விண்ணார்ந்து
வியந்து விதந்து
புகழ்ந்து மாய்ந்து
ஒருவரை ஒருவர்
கட்டிப் பிடித்து
பின்முதுகில்
தன் அம்பு தேடி

எச்சில் பகிர்ந்து
உச்சமாய் நடித்து
அறை நீங்கிய
மறு கணம்
காறி உமிழ்ந்தும்
எச்சில் தடம்
பதித்தனர்

அதோர்
அதிசய
அரங்கம்

அதிசய கூடல்

அறிவிலி
கூடலும் தான்.

சித்திரக் குள்ளன்
சிறுகை பொத்தி
சாங்கிய நகை
சிந்தினான்.

கேள்விக்காரன்…
30/12/2022
காலை மணி :08:45