2023/ஆர்க்கே… !

எல்லைகள் விரிய
எண்ணங்கள் சிறக்க

பெருமைகள் பெருக
சிறுமைகள் குறைய

நன்மைகள் திகழ
தீமைகள் அகல

வளமது கொழிக்க
வன்மம் தொலைக்க

எழுத்துக்கள் மந்திரமாக
செயல்கள் சரித்திரமாக

சிரிப்பே அமிர்தமென்றாக
சிந்தனை தீர்க்கமென்றாக

ஒற்றுமை உலகாள
வேற்றுமைகள் நிலம்வீழ

காற்றில் கீதம் தவழ
பாட்டினில் செறிவுதெறிக்க

யாவையும் நலமாய் விளைய
ஞாலமே அன்பால் இணைய

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
–அன்புடன் ஆர்க்கே…!

2 Comments on “2023/ஆர்க்கே… !”

Comments are closed.