
மடித்து மடித்து இருந்து
சுருட்டப்பட்ட
ஒரு காகித்தைப்போல்
மனிதரொருவரைப் பார்த்தேன்…
அவர் மடிப்பிலெல்லாம்
அனுபவங்கள்…
சுருட்டப்பட்ட சுருக்கங்களில்
பல முகங்கள்…
காற்றில் காகிதமொன்று
பறக்க முனைந்தது..
வாழ்க்கையில் மட்டும்
அவர் இன்னுமின்னும்
சிறகடிக்க காகிதப் பறவையாக
முயன்று கொண்டிருக்கிறார்…
எழுதப்படாத காகிதமும்
பறக்கப்படாத அவரும்
வெள்ளந்தி வெள்ளையாக
இப்போது என்முன்!
நான் காகிதமாகட்டுமா?
இல்லை மனிதராகட்டுமா?
எதுவானாலும் சரி..
உயரே பறந்து கொள்
என்கிறது ஆழ்மனம்…
பறக்கிறேன் உங்கள் முன்!
ம.சக்திவேலாயுதம்
