பனி நதி/லியு சோங்யுவான்

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன்


ஓராயிரம் குன்றுகள், ஆனால் யாதொரு பறவையும் வட்டமிடவில்லை;
பத்தாயிரம் பாதைகள் , எவரொருவரின் காலடித்தடமும் கிடையாது;
தனித்து மிதக்கும் படகிலிருந்தபடி
வைக்கோல் தொப்பியணிந்த கிழவர்
ஏகாந்தமாய் தூண்டிலிடுகிறார்
குளிர் பனி நதியில்.