ஊன்றுகோல்/VR.கிருஷ்ணன்

அம்மா!
நீ எனக்குப் புதிர்!
அப்பா!
ஆட்டிப் படைக்கும் அரசன்!

நீ
சொல்வதெர்க்கெல் லாம் எதிர்!

இறுதியில் நீ சொன்னதைத்
தான் சொன்னதாக உறுதி செய்யும் மனம்!

அறிவேன்! யாவும் உன் முடிவே!

எனினும் அது அவர் முடிவாக
அறிவிக்கும் குணம்!! ஏன்?

நீ சொன்னாய்!
“அதுதானே அவர் ஊன்றுகோல்.”