
மாடிப்படியில்
இருந்து மெல்ல பூப்போல இறங்கும்
அந்த பூனையை பார்த்து பயமாக உள்ளது!
எங்கே ஒரு படி மாற்றி ஒரு படி கால்
வைத்து கீழே விழுந்தால்
எந்த டாக்டரிடம் போய் காட்டும்?
சாலை நடுவில் சுகமாக தூங்கும்
அந்த நாய்க்குட்டிகளை பார்த்து
கொஞ்சம் பயமாக இருக்கிறது!
வேகமாக வரும் எந்த வண்டியிலாவது
அடிபட்டு விட்டால்
காப்பாற்ற யார் இருக்கிறார்கள்?
மின்சார கம்பி மேல் உட்கார்ந்து கரையும்
அந்த காக்காவை பார்த்து பாவமாக உள்ளது!
அது மின்சாரம் பாய்ந்து உயிருக்கு
ஆபத்து ஏற்படும் என்பதை
எப்படி அதனிடம் சொல்ல?
