
ஒவ்வொரு தருணமும்
மறக்காமல் கதவுகளைச்
சாத்தி..
கவனமாகக் காத்திருந்து
விரட்டி விரட்டி த்
துரத்தியும்..
குட்டிப்போட
வயிற்றைத் தூக்கியபடி
வந்ததை வரவிடாமல்
விரட்டி
எங்கோ ஈன்றுவிட்டது..
இருமுறை அடி வாங்கித்
துள்ளித் தப்பித்தது..
இனி துரத்தி விரட்ட
அவசியமற்று
தெருவில் நாய்களிடம்
சிக்கி இறந்து கிடந்த
அந்தப் பூனை இனி
தூங்க விடாமல்
கொஞ்ச நாள் துரத்தும்
நான் பூனையாக..
