தை மாதம் பிறந்ததே/அன்புச்செல்வி சுப்புராஜூ


தைமாதம் பிறந்ததே
தமிழர் திருநாள் வந்ததே
என் தோழிப் பெண்களே
பொங்கல் வைக்க வாங்களேன்

அரிசிமாவு கோலமிட்டு
வாசலைத்தான் அழகுசெய்து
மாவிலை தோரணங்கட்டி
வீட்டைத்தான் அலங்கரித்து

புத்தரிசி, பருப்போடு
வெல்லம் சேர்த்துச்
செய்த பொங்கல்
மஞ்சள், இஞ்சி கொத்தோடு
செங்கரும்புக் கட்டோடு
வெற்றிலை, பாக்கு
தேங்காய், பழமும்
ஆதவனுக்குப் படைத்திடுவோம்

கண்ணான ‌இயற்கைக்கும்
காத்திடும் உழவனுக்கும்
உழைக்கும் மாட்டுக்கும்
தழைக்கும் பூமிக்கும்
நன்றி சொல்லி வணங்கிடுவோம்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்திடுவோம்