எதுவும் தெரியாது/வளவ.துரையன்

தேங்கும் தண்ணீரில்
கழுத்தை ஆட்டிக்
குளிக்கும் காக்கை

ஆடும் மரக்கிளைக்கேற்ப
அழகாய் அசையும்
பச்சைக் கிளிகள்

மல்லிகைப் பூக்களுக்குச்
சேதி சொல்ல வரும்
பட்டாம் பூச்சிகள்

வாசனையைப் பறக்கவிட்டு
வாவென்றழைக்கும்
பவழமல்லி மரம்

எதுவுமே தெரியாது
ரசிக்கத் தெரியாத மனத்துக்கு