செல்வி பிரகாஷ் கவிதை

தேன் பலாச்சுவையில் தோய்ந்த
தாய்த்தமிழ் மொழியே வாழி!

உவகையில் உலகம் வாழ
உதிக்கின்ற ஆதவன் வாழி

ஏருகொண்டுழுது வாழும்
ஏற்றமிகு உழவன் வாழி

வளைந்த நற்கதிர்கள் கொண்டு
விளைந்த நல் நிலங்கள் வாழி

கனிந்த நல் மனதிலென்றும்
கரும்பென இனிமை வாழி!

இம்மையில் வறுமை நீக்க
இசைந்திடும் வளங்கள் வாழி!

நீர் வளம் நிறைந்து பூமி
நிம்மதி நிலையாய் வாழி!

கவலைகள் பனியாய் நீங்கி
கனிந்திடும் கனவுகள் வாழி!

பொங்கும் நல் மனதைக்கொண்டு
பொங்கலோ பொங்கல் வாழி!