
ஏமாறாதவன் அதிருஷ்டசாலி என்று
சுலபமாகச் சொல்லி விடலாம்
ஆனால் ஏமாறாமல் இருப்பது எப்படி
என்றுதான் தெரியவில்லை. ஆசைப்
படாமலே இருப்பது ஏமாறாமல் இருப்
பதற்கு ஒரு வழிதான் ஆனால் ஒரு
ஆயுள் காலத்தில் ஒருவித ஆசையும்
படாமல் இருந்து விட முடியுமா?’
முடியாது என்பதனால்
ஏமாற்றங்களையும்
ரசித்து அனுபவிக்கக் கற்றுக் கொண்டு
காலம் தள்ளுவதே சரியென் று
சொல்ல எனக்குத் தோன்றுகிறது.
