
இன்று பிறக்கிறாய்-
எனக்காய் கொஞ்சம்
கூடுதல் இனிப்புடன்.
தையின் துவக்கமும்
தனியான துலக்கமும்
எப்போதும்
அடிப்பாகக்
கன்னல் சுவை.
உள்ள உவகையை
பொங்கப் பொங்கத் தந்து
அமுதக் கலயம் பொங்கி வழியும்
அந்த பொங்கலின்
பூரிப்பு நின்சிறப்பு.
ஊரே கொண்டாடுகிறது
உன் வருகையை உற்சாகமாய்.
எனக்குத் தெரியும்-
இது ஒரு திருநாள்.!
கதிரவனே நீ
நீ உற்சவச்சாமி!
“தை”யலே நீ
அன்னமிடும் தாய்!
வாழ்த்தி வணங்குகிறேன்
வரம்கொடுங்கள் என்றென்றும்.

அருமை