
அரங்கிற்கு
நண்பர்கள் வருகிறார்கள்
சிறப்பாகப் பேசுகிறார்கள்
உதவியும் செய்கிறார்கள்
எல்லாம் சரி.
ஆனால்
நான் கொண்டு வந்த
7 புத்தகங்களில்
ஒன்றுகூட வாங்கவில்லை
என்பதோடல்லாமல்
விருட்சம் இதழைத்
தொடக்கூட இல்லை..
அதாவது பரவாயில்லை
இதற்கு முன்
கொண்டு வந்த
பல புத்தகங்களை என்ன என்று கேட்கக் கூட இல்லை
பத்து ரூபாய்க்
கொடுத்து
ஒரு பழைய இதழ்
விருட்சம்
வாங்க விரும்பாத நண்பர்களைப்
பற்றி என்ன சொல்வது?
