
இவ்விதமாக இவன்
சொல்வது என்னவென்றால்
பறவைகள் உலகத்தில் நானில்லை
ஏனென்றால் எனக்கு றெக்கையில்லை
விலங்குகள் உலகத்தில் நானில்லை
ஏனென்றால் எனக்கு கூர்மையான நகங்களில்லை
மீன்கள் உலகத்தில் நானில்லை
ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது
தாவரங்கள் உலகத்தில் நானில்லை
ஏனென்றால் எனது கால்கள்
பூமியில் வேர்விடவில்லை
மனிதர்கள் உலகத்தில் நானில்லை
ஏனென்றால் மதமெனும் மூக்குக்கண்ணாடியை
என்னால் கழட்ட முடியவில்லை
தெய்வங்கள் உலக்தில் நானில்லை
ஏனென்றால் சடங்குகளும், சம்பிரதாயங்களும்
எனக்கு அலுத்துவிட்டன
ஆவிகள் உலகத்தில் நானில்லை
ஏனென்றால் என்னால் பழிவாங்கப்பட
வேண்டியவர்கள்
ஏற்கனவே இறந்துவிட்டனர்!
