எதிர்/ஆர்க்கே

மிருகத்தனம் இல்லெயனில்
மனிதநேயமே இல்லை.

எதிரி இல்லையெனில்
வெற்றியே இல்லை.

நிழல் இல்லையெனில்
நிஜமே இல்லை.

புறம் இல்லையெனில்
அகமே இல்லை.

இலக்கு இல்லையெனில்
பயணமே இல்லை.

பொய் இல்லையெனில்
உண்மையே இல்லை.

போலி இல்லையெனில்
அசலே இல்லை.

நண்பன் இல்லையெனில்
நட்பே இல்லை.

பிறப்பு இல்லையெனில்
இறப்பே இல்லை.

புறஞ்சொல்லலில்லையெனில்
அகமுணர்தலே இல்லை.

இருப்புநிலை இல்லையெனில்
வாழ்க்கையே இல்லை !