ஒரு பூனை/அழகியசிங்கர்

நேற்று
காலையில்
ஒரு பூனையைச்
சந்தித்தேன்
நான் டூ வீலர்
எடுக்கும் இடத்தில்

நேற்று
காலையில்
ஒரு பூனையைச்
சந்தித்தேன்
நான் டூ வீலர்
எடுக்கும் இடத்தில்

வெள்ளை நிறப்பூனை
அது
என்னையே
முறைத்துப் பார்த்தது

புத்தகக் காட்சிக்குப்
போகிறேன்
இன்றுதான் கடைசி நாள்
என்றேன்
பதில் பேசாமலிருந்தது

நானும் முறைத்துப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
அது அசையவில்லை

நான் சந்தித்த
பூனையைப் பற்றி
யோசித்தபடி
புத்தகக் காட்சிக்குச்
சென்றேன்