ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 49/அழகியசிங்கர்

24.01.2023 – செவ்வாய்

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
 மோகினி:   புத்தகக் காட்சி எப்படி நடந்தது..
அழகியசிங்கர் : நான் எதிர்பார்த்தபடி இல்லை.
ஜெகன் :  ஏன்?.
மோகினி :  வழக்கம்போல் இல்லாமல் டபுள் ஸ்டால் எடுத்திருந்தீர்களே..
அழகியசிங்கர் :  ஆமாம்.  டபுள் ஸ்டால் என்பதால் விஸ்தாரமாக இடம் கிடைத்தது. புத்தகங்களைத் தாராளமாக டிஸ்பிளே பண்ண முடிந்தது. 
மோகினி :  நானும் வந்திருந்தேன்.  சிறப்பாகவே எல்லா ஏற்பாடும்  இருந்தது.
அழகியசிங்கர் : ஆனால் கூட்டம் வரவில்லை.
ஜெகன் :  முடியும்போது கடைசி இரண்டு நாட்கள்தான் கூட்டம்.
அழகியசிங்கர்:  முதலில் எந்தவித எதிர்பார்ப்பின்றி எனக்கு உதவிய நண்பர்களுக்கு நான் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். அவர்கள் இல்லாவிட்டால் இந்தப் புத்தகக் காட்சியை என்னால் நடத்தியிருக்க முடியாது.    
வழக்கம்போல் புத்தகக் காட்சிக்கு வந்த நண்பர்கள்  என்னைப் பரவசப்படுத்தாமல் இல்லை.  
மோகினி :  எல்லோருடனும் நீங்கள் போட்டோ எடுத்துக்கொண்டதைச் சிலர் கிண்டல் அடித்தார்கள்.
ஜெகன் :  அது குறித்து கவலைப்படத் தேவையில்லை..
மோகினி : ஆமாம். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். எல்லோரையும் பார்ப்பது. புகைப்படம் எடுப்பது. 
அழகியசிங்கர் : 14ஆம் தேதி நடந்த இலக்கியச் சங்கமம் நிகழ்ச்சியில்  எனக்குக் கவிதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
ஜெகன் : அதேபோல் பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் உங்கள் கதைகள் மலையாளத்தில் மொழி ஆக்கம் செய்ய ஒப்பந்தம் ஆகி உள்ளது. 
அழகியசிங்கர் : ஆகியிருக்கிறது.  
மோகினி :   என்னதான் அப்படி இந்தப் புத்தகக் காட்சியில் புததகங்கள் வாங்கினீர்கள்.
அழகியசிங்கர் :  நான் முதலில் ஒரு விற்பனையாளன்.  அதில் நான் தோல்வி அடையும்போது படைப்பாளியாக மாறி விடுவேன்.  அதன்பின் நான் வாசிப்பவனாக மாறி பல புத்தகங்களை வாங்கிக் குவிப்பேன்.  இந்த முறையும் நான் புத்தகங்களை வாங்கிக் குவித்தேன்.சில புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன.  அன்புடன் கொடுத்தவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிப்பது  கடமை. கிடைத்த புத்தகங்களிலேயே என்னால் மறக்க முடியாத புத்தகம் மனுஷ்ய புத்திரனின் 'மிஸ்..யூ. '  மனுஷ்ய புத்திரனின் 1798 கவிதைகள் கொண்ட 2288 பக்கங்கள் கொண்ட புத்தகம். 14.02.2021லிருந்து 25.12.2021 வரை மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைகளின் திரட்டு.  அவர் கவிதைகள் ஒவ்வொன்றையும் என்னால் ரசிக்க முடிகிறது. இப்போதே அவர் கவிதையின் எண்ணிக்கையில் கின்னஸ் சாதனை செய்திருப்பார் என்று தோன்றுகிறது. 2022 ஆண்டில் 12 கவிதைத் தொகுதிகள்.  ஒவ்வொரு கவிதைத் தொகுதியிலும் குறைந்தது 200 கவிதைகள். அவர் கவிதைப் புத்தகம் கிடைத்தத் தருணத்திலிருந்து கவிதை மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.
மோகினி :  சரி அவர் கவிதைகள் எப்படி.
அழகியசிங்கர் : எல்லாக் கவிதைகளும் சிறப்பாகவும் தெளிவாகவும் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன.  எந்தக் கவிதையைத் தொட்டாலும் கவிதையின் தெளிவு என்னை வியக்க வைக்கிறது. தலையைப் பிய்த்துக்கொள்ளும்படி வரிகள் இல்லை. 
        ஜெகன்: இரவு 10.25 ஆகிவிட்டது. 
அழகியசிங்கர்.   எல்லோருக்கும் இரவு வணக்கம்.
                                                                                                                                24.01.2023 - Night at 10.45pm

One Comment on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 49/அழகியசிங்கர்”

Comments are closed.