இசையன்பர் கண்ணன் காலமானார்!/திருப்பூர் கிருஷ்ணன்


*மியூசிக் கண்ணன் என்று அழைக்கப்படும் இசையன்பர் கண்ணன் இன்று காலை சென்னையில் காலமானார்.

இசை நடனத் துறைகளிலும் எழுத்துத் துறை சார்ந்தும் ஏராளமான நண்பர்களைப் பெற்றவர். நாட்டியரங்கம் என்ற கலை அமைப்பின் உறுப்பினராகச் செயல்பட்டவர்.

ஆண்டுதோறும் இசைவிழாத் தருணத்தில் நல்லி அவர்களின் உதவியோடு மியூசிக் டைரி எனப்படும் கையேட்டை வெளியிட்டு வந்தார்.

எந்தெந்த சபாக்களில் யார் யாரின் கச்சேரி எப்போது நடைபெறும் என்பதை அந்தக் கையேடு பட்டியலிட்டுத் தெரிவித்தது. கடின உழைப்பின்பேரில் அவர் தயாரித்த அந்தக் கையேடு இசையன்பர்களுக்குப் பேருதவியாக இருந்தது.

ராகங்கள் நினைவுப் பாதை எனவும் இசை வழிகாட்டியாக ஒரு நூல் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்கள் பலவற்றிற்கும் தவறாமல் வருகை தருபவர். பண்பட்ட உள்ளம் கொண்ட கூர்மையான விமர்சகர். கலை இலக்கிய உலகம் ஒரு தேர்ந்த ரசிகரை இழந்துள்ளது.

அவரது மனைவி திருமதி கீதாவுக்கும் புதல்வி திருமதி செளபர்ணிகா உள்ளிட்ட குடும்பத்தினர்க்கும் மனமார்ந்த ஆறுதல்கள்.

2 Comments on “இசையன்பர் கண்ணன் காலமானார்!/திருப்பூர் கிருஷ்ணன்”

  1. அடடா.இவரை நான் நன்கு அறிவேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரஙகலைத்தெரிவித்துக்கொள்கிறேன்

Comments are closed.