
ஸ்வாமி படங்கள், எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா என அரசியல் தலைவர்களின் ஃபோட்டோக்கள், கமல், ரஜினி, அஜீத், விஜய் என்று நடிகர்களின் படங்கள் என ஆட்டோக்களில் பார்த்திருக்கிறோம்.
அந்த ஆட்டோவில், ஃபோட்டோவில் இருந்தவர்… எழுத்தாளர் பாலகுமாரன் சார்!
ஆட்டோ டிரைவரின் பெயர் நீலகண்டன். பாலகுமாரன் சார் எழுத்துக்கள் என்றால், விடிய விடியப் படிப்பவராம்! ‘ அவரைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, ‘அவரைப் பார்த்து, பேசிக் கிடைக்கிற சந்தோஷத்தையெலாம், அவரோட புத்தகமே தந்துருச்சு. என் தெளிவுக்கும் உழைப்புக்கும் அவரோட எழுத்துதான் காரணம் என்று சொன்னார் அவர்.
எங்கள் அலுவலகத்துக்கு அருகில் உள்ள வங்கிக்கு எதற்காக வந்தார் தெரியுமா? அந்த வங்கியின் செக்யூரிட்டி, அவரின் நண்பர். போதாக்குறைக்கு அவரும் பாலகுமாரன் சார் வாசகர்.
அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது… ஏதோ என் பால்ய நண்பர்களைச் சந்தித்தது போன்ற உணர்வும் நிறைவும் வந்தது.

அவரது எழுத்தின் சக்தி அப்படி