ரமேஷ் பத்மநாபன் கவிதை

அந்த தேன் கலர் செருப்பை
கடையின் காட்சிப் பெட்டியில் தினமும்
பார்க்கிறேன்
மெழுகுபூசிக்
குளித்து
ஒளியை உமிழும்..
அதற்காகவே செய்யப்பட்டது
என் கால் என்று தோன்றும்..
ஏனோ தெரியவில்லை
அதை நானும் வாங்கவில்லை
வேறு யாரும் வாங்கவில்லை