அகலாத பிம்பம்/செ.புனிதஜோதி

பொருள் நுட்பத்திற்குள்
ஊடுருவிப் பாய்கிறது
ஒளி கீற்று
இருண்மையின் ஆழத்தை
தேடிப் பயணிக்கிறது
வேர்கள்
புரியாதப்புதிருக்குள்
சொல்லை இணைத்து
பறக்கவிடுவதில்
விரிகிறது வானம்
எளிதாக கடத்தகூடாது
என்பதற்காகவே முகமூடி
போட்டு அனுப்பிவிடுகிறேன்
பொட்டணத்தைப் பிரித்து
பார்க்காமலே
புரிந்துகொள்கிறாய்
உன் அகலாத பிம்பத்தை.