அழைப்பு/ப.மதியழகன்

தேவாலயத்தின் பிரார்த்தனை
விண்ணப்பம் எனது காதில்
விழுந்தது
சொக்கநாதர் கோயிலில்
ஓதப்படும் தேவாரம்
எனது காதில் விழுந்தது
பள்ளிவாசலில் இசைக்கப்படும்
பாங்கோசை எனது காதில்
விழுந்தது
மூன்றுமே கடவுளுக்கான
அழைப்பு
ஓசை அண்டத்தில்
பயணித்து இறைவனை அடையும்
முன்பு அங்கிருந்து கீழே
பூமிக்கு இறைச்செய்தி
அருளப்பட்டுக் கொண்டிருந்தது
செவிசாய்க்க பூமியில்
யாருமில்லாதபோது கடவுளின்
குரல்கூட சிறைப்பட்ட
சுவர்க்கோழிகளின் சத்தம் என
அலட்சியப்படுத்தப்படுகிறது
அடிமைப்படுத்துதலின் ருசி
ஆன்மாவை
ஊழிக்காலம் வரை
சிறைவைக்கிறது!