ஜனவரி 30/எஸ் விவேணுகோபாலன்

ஒரு முறை அல்ல
எண்ணற்ற முறை
கொல்லப்பட்டுக்
கொண்டே இருப்பவர்
மகாத்மாவாகத் தான்
இருக்க முடியும்

ஒரு விசாரணை தான்
நடத்தப் பட்டது
கொலையாளிக்கு எதிராக

அன்றாடம் விசாரணை
அப்போதைக்கப்போது தீர்ப்பு
கொல்லப்பட்டவருக்கு
எதிராக …
மகாத்மா தான் அவர்

மெய்ப்பிக்கப் பட்ட
குற்றத்தைக்
கொண்டாடிக்
கோயிலும் இப்போது
கொலையாளிக்கு…

ஒரு வேளை
உயிர்த்தெழுந்து வந்தால்
அதே கோயிலுக்குள்
தியானம் செய்யச் சென்று
அமரவும் கூடும்
மகாத்மா

மன்னித்து விடலாம் கொலையாளிகளை
மறந்து விடலாம் உயிர்ப்பலியை
மன்னிக்கவும் –
மன்னிக்க இயலாது
மத வெறியை
மத வெறிக்கு
நியாயம் கற்பிப்பதை !

8 Comments on “ஜனவரி 30/எஸ் விவேணுகோபாலன்”

  1. வைர வரிகள் வேணு. தங்களால் மட்டுமே சொற்களுக்கும் பட்டை தீட்டமுடியும்.

  2. மதவெறி என்றும் வென்றதில்லை அது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் மதவெறிக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கட்டும

  3. பல நூறு மைல்களுக்கப்பால் அமர்ந்து கொண்டு பல வருடங்கள்
    கடந்த பின் கழகங்கள் தரும் கூலிக்காய் மாரடிக்கும் தோழர்களுக்கு
    தேசப்பிரிவினையின் போது நடந்த கொடூரங்கள் தெரிந்திருக்க
    நியாயமில்லை.. ’15 நிமிடங்கள் போதும் ஹிந்துக்களை
    ஒட்டு மொத்தமாக அழிக்க” என்று பொது மேடையில் கூக்குரல்
    இன்றும் ஒலிக்க இங்கே மட்டுமே சாத்தியம்..

    நீ யாரை வேண்டுமானாலும் கும்பிடு.. இறை நம்பிக்கையற்றவனாக் கூட
    இரு.. சடங்குகள் நம்பு.. செய்.. அல்லது விடு.. அன்பு ஒன்றே போதும்
    என்ற வாழ்வியலையும் மெய்யியல் ஞானத்தையும் போதிக்கும்
    வாழ்க்கை நெறி – உங்களுக்கு மதவெறி..

    என் கடவுளை ஏற்காதவனைக் கொன்றால் எனக்கு சொர்க்கத்தில்
    72 கன்னியர் காத்திருப்பார் என நம்பி கொலைபுரிபவன் மத சார்பற்றவன்..!

    மௌடீகத்திற்கும் ஒரு அளவு வேண்டாமா?

    நாதுராம் கோட்சேவின் 40 பக்க வாக்குமூலத்தை நேரமிருப்பின் படியுங்கள்..
    அதில் ஏதேனும் ஒரு வாசகம் உண்மைக்குப் புறம்பாக இருப்பின் சொல்லுங்கள்
    நானும் உங்களுடன் வந்து மூன்றாம் கலைஞருக்கு செருப்புத் துடைக்கிறேன்..

    1. கூலிக்கு மாரடிப்பவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும். வாய் கூசாமல் காலங்காலமாக கம்யூனிஸ்ட்களை நோக்கி பொய்க்கு வீசி அடிப்பது பிண வாடை ஊழல் நாற்றமெடுக்கும் இடத்திலிருந்து பார்த்தால் அப்படித்தான் இருக்க முடியும்.

      1. தோழர்.. நிஜமாகவே சித்தாந்தங்களையும் பொதுவுடைமைத் தத்துவங்களையும் நம்புபவர்கள் கழகங்களின் முதுகில் உப்புமூட்டை ஏற மாட்டார்கள்.. பட்டத்து இளவரசர்கள் அரியணை ஏற படிகளாக தடிமனான தத்துவப் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டார்கள்.. யுகாந்தரமாக கட்சிப் பதவியில் ஒட்டி கொண்டிருக்க மாட்டார்கள்.. அர்ப்பணிப்பு பற்றி தொண்டர்களுக்கு வகுப்பு எடுத்து விட்டு பி எம் டபிள்யுவில் போக மாட்டார்கள்.. நீங்கள் இந்தப் பம்மாத்தை நம்புங்கள்.. அது உங்கள் உரிமை.. மற்றவர்களும் நம்ப வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.. சிந்திக்கத் தெரிந்தவர் எப்படி நம்புவார்கள்..?

Comments are closed.