பரிசளித்த மூவருக்கும் நன்றிகள்/சோ.தர்மன்

சில நாட்களுக்கு முன் நான் வெளிநாட்டு நண்பர்களிடம் இங்க் ஊற்றி எழுதும் பேனா கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன்.
இதில் முதலில் இருக்கும் இரண்டு பேனாக்களும் சென்னை நண்பர் பேராசிரியர் அழகரசன் வாங்கிக் கொடுத்தது.Gama என்று போட்டிருக்கிறது.என்ன விலை எங்கே வாங்கியது என்று சொல்ல மறுத்து விட்டார்.
மூன்றாவதாக இருக்கும் பேனா பிரெஞ்ச் தயாரிப்பு.அற்புதமான பேனா.என்னுடைய சிங்கப்பூர் வாசகி நிம்மி வாங்கி வந்து புக் பேரில் வைத்து கொடுத்தார்கள்.இத்துடன் சேர்த்து நிறைய்ய சிங்கப்பூர் சாக்லெட்டுகளும் கிடைத்தது.பதிலுக்கு நான் கோவில்பட்டி கடலை மிட்டாய் கொடுத்தேன்.
நான்காவதாக இருப்பது அமெரிக்காவில் வாங்கியது.அமெரிக்க தயாரிப்பு.என்னுடைய தஞ்சாவூர் வாசகர் வைத்தியநாதய்யர் அவர்கள் அமெரிக்காவில் வசிக்கும் தன் மகன் மருமகளைப் பார்க்கப் போன போது என் முகநூல் பதிவைப் பார்த்து விட்டு நான் கேட்காமலேயே வாங்கி அனுப்பியிருக்கிறார்.அற்புதமான பேனா.ஒரு வருடத்திற்கான இங்க் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற வீடியோ எல்லாவற்றையும் சேர்த்து அனுப்பியிருக்கிறார்கள்..
பேனா பரிசளித்த மூவருக்கும் நன்றிகள் பல.புது பேனாக்களால் இப்போதுதான் எழுதத் தொடங்கியிருக்கிறேன்.