கடவுள்/கணேஷ்ராம்

ஆதிமூலமே
என்றலறியது
ஆனை!

ஆடியபடி
வந்தவன்
ஆண்டவன்
திரௌபதிக்கு
தாமதமாக
வந்தவன்

காக்கும்
கரங்களொன்றில்
வாகாக
ஆயுதமேந்தி

எய்தனன்
முதலை நோக்கி
மாண்டது
முதலை
மீண்டது
ஆனை..

அது சரி,
முதலையின்
ஆண்டவன்
யார்?