
மனிதர்களை அளவிட மனம்
எப்போதும் ஏதோஒரு அளவுகோலை
தேடிக்கொண்டிருக்கிறது.
எல்லோருக்குமான அளவுகோல்
ஒரேமாதிரியாக இருப்பதில்லை
என்பதே வாழ்வியல் கணக்கு.
ஆனால் நாம் ஏதோ ஒருவிதத்தில்
அனைவரையும் அளவியல்
எல்லைக்குள் கொண்டுவந்துவிட்டதாய்த்
மனஆறுதல் பட்டுக்கொள்கிறோம்.
அனைத்து அளவீடுகளும் துள்ளியமாயிருக்க
சாத்தியக்கூறுகளே இல்லை.
உறவுகளிடமும்..நட்புகளிடமும்
நமது அளவீடுகள் தோற்றுப்போகும்போது..
நமக்கான
ஏமாற்றத்தை சொற்களைக்கொண்டு
நிரப்புகிறோம்.
நம்மைப்பற்றிய அளவீடுகள்
அவரவர் உள்ளங்களில் எந்தளவு
இருக்கிறது என்பதை அறிவோமானால்….
நாம் வாழ்வதற்கான காரணத்தை
வெறுக்கக்கூடும்.
ஆனால் உண்மை அப்படியா
இருக்கிறது…
பிறரை அளந்துகொண்டே
வாழ்க்கை முழுவதும் இருந்துவிட்டு…
நம்மைப்பற்றிய அளவீடுகளை நமக்குள்
பெருமிதமாய் வளர்த்துக்கொண்டே
காலத்தைக்
கடத்திவிடுகிறோம்.
♦
