
மூச்சிரைக்க ஓடிவந்து ரயில் நிலையத்திற்குள் நுழையுமும்பே ரயில் கிளம்பிச் சென்றுவிட்டது..
ஆனாலும் நான் ரயிலுக்குள் உட்கார்ந்து விட்டேன்.
ஓடி ஓடி மறையும் மின் கம்பங்கள் தூரத்து வீட்டின் ஒற்றை வெளிச்சம்
எனக்குப் பிடித்த
ஓர இருக்கை
திடீரென்று நாசியைத் தாக்கும்
சர்க்கரை ஆலை வாசம்…
