நர்த்தனம்/தங்கேஸ்

கனிவானதொரு வானம்
சொற்களுக்குள் மழை மேகத்தை
தேக்கி வைத்திருந்தது

நான் ஏற்கனவே கடலின் ஈரத்தை
அவைகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தேன்

அத்தனை மழைத்தூவிகளும்
மேலிருந்து சிறகடித்து வந்த போது
சின்ன சின்ன குருவிக் கூடுகள்
இந்த தெருவங்கும் திறந்து கொண்டன

குருவிக்குஞ்சுக் கொன்று
செம்பருத்தி மொட்டுக் கொன்று
கிறுகிறு வண்ணம் சுற்றும்
முதிர்சருகுக்கொன்று
ஏந்தி நிற்கும் உள்ளங்கைகளுக்கு
ஒன்றிரண்டு

பசித்த வயிறுகளுக்கும்
கொஞ்சம் கொஞ்சம்

பாயும் நதிக்கு மட்டும்
செண்டை மேளத்தோடு
காளிங்க நர்த்தனம்

One Comment on “நர்த்தனம்/தங்கேஸ்”

Comments are closed.