காந்தி ஜெயந்தி/கணேஷ்ராம்

என் இனிய
மகாத்மாவே..

நீ
இறவாமல்
இருந்திருந்தால்
என்னவாகி
இருந்திருக்கும்?

ஓயாமல்
ஒருவாயால்
கொற்றவனைக்
குற்றம் குறை
சொல்வதையே
கொண்டிருப்பாய்
வழக்கமென
வீண்பகையை
வெறும் வாயால்
வாசலுக்கே
கொணர்ந்திருப்பாய்

பத்து வருடம்
கடந்திருந்தால்
நடை தளர்ந்து
ஓய்ந்திருப்பாய்

ஆசிரமக்
கதவடைத்து
காந்திக்குக்
கூடவில்லை
தளர்வாக
இருக்கின்றார்
தளிர் மேனி
கேட்கின்றார்
தளர்நடையில்
தனைத் தாங்க

அபவாதம்
மலிந்திருக்கும்
எச்சில் காசெடுத்து
எதையென்றும்
நம்பும் கூட்டம்

நகையுகுத்துத்
தெருவெங்கும்
ரகசியமாய்
ரசிக்கப் பேசும்

வயதான
அவர் கோலம்
ஊர்கோலம்
போவதற்குள்

வாயடைத்து
பேச்சுடைத்து
வாழாமல்
வீழ்த்தியதில்

எய்ம்ஸ்ஸில்
அடைத்திடுவார்
மெய்யெல்லாம்
குழல் செருகி

இன்றைக்கு
நாளைக்கு
என்று தினம்
நியூஸ் படித்து
ஹேஷ்யங்கள்
பொய்க்கும்
தினம்
கண்மூடி
மறைந்திடுவார்

நீண்ட நாள்
படுக்கை
இவர்
பிராபல்யம்
குறைத்திருக்கும்

டீக்கடை
வடை
சுருட்டும்
செய்திக்குள்
மறைந்து
விடும்

அப்பனே
நீ
ஊருக்கே
உழைத்தாலும்
(ஆட்சிக்கு)
உபத்திரவம்
இல்லாமல்
போனதனால்
புகழ் பெற்றாய்

எப்பவாவது
ஞாயிறு
இல்லாத
நாள்கிழமை
பார்த்தொருநாள்
ஜெயந்திக்கு
விடுமுறையாய்
வருகின்றாய்

ஐம்பத்தி
எட்டென்றால்
நீ போனாய்
என்பதையே

உனக்கே அவர்
மறைத்திருப்பார்