மனுஷ்ய புத்திரன் கவிதை

ஒவ்வொரு படியாக
என்னைக் கவனமாக
இறங்கிப் போகும்படி
சொல்கிறார்கள்

ஏதேனும் படியில்
நான் சற்றே தயங்கி
நின்றுவிட்டால்கூட
ஆதரவாகக் கையைப் பற்றி
இறங்கச் செய்கிறார்கள்

ஒரு உறவிலிருந்து
இப்போதெல்லாம் யாரும்
ஒரேயடியாக தலை குப்புற
விழச் செய்வதில்லை

ஒவ்வொரு படியாக
இறங்கிப்போக
கனிவுடன் வழிகாட்டுகின்றனர்

2.2.2023
காலை 9.58
மனுஷ்ய புத்திரன்