| T.V. Radhakrishnan | ![]() ![]() | ||
![]() |

டி வி ராதாகிருஷ்ணன்
நாலடியாரில் நட்பாராய்தல் அதிகாரத்தில் வரும் ஒரு பாடல்
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.
நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம்
உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்? ஒரு பயனும் உண்டாகாது. ஆதலால், வயலை விளையும்படி செய்கின்ற வாய்க்காலைப் போன்றவா¢ன் நட்பினை, தூரத்தில் இருப்பதாயினும்
போய்க் கொள்ளல் வேண்டும். (வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லையாயினும் தூரத்து நீரைக் கொணர்ந்து வயலை விளைவிக்கும் வாய்க்கால் போலும் பண்புடையாரது நட்பினை நாடிப் பெற வேண்டும் என்பது கருத்து).
என்ன ஒரு அருமையான உவமைகள்…
_

