கோவை எழிலன்

இலக்கிய இன்பம் 6
பொருள் தேடிச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் திரும்ப வில்லை. தலைவியை எவ்வாறு தேற்றுவது என அஞ்சும் தோழிக்கு தலைவி கூறுவதாக வரும் ஓதலாந்தையாரின் குறுந்தொகைப் பாடல் இது.
பொருள்: வண்டுகள் மொய்ப்பதால் மலர்ந்து பொன்னாலான தலையணி அணிந்த பெண்களின் தலைபோல் காட்சி அளிக்கும் கொன்றை மலர்கள் கார்காலம் வந்து விட்டதாகக் கூறினாலும் என் தலைவன் பொய் சொல்ல மாட்டான் என்பதால் நான் கார் காலம் வந்து விட்டதாக நம்ப மாட்டேன்.
தலைவி கார்காலம் வந்ததை உணர்ந்தாலும் தன்னைத் தேற்றிக் கொள்கிறாள். மலர்கள் மலர்ந்தது தானாக இல்லை வண்டுகள் மொய்த்ததால் என்று காரணம் கற்பிப்பது அழகாக உள்ளது.
“வண்டு படத் ததைந்த கொடி இணர் இடை இடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம் கார் எனக் கூறினும்
யானோ தேறேன் அவர் பொய்வழங்கலரே.”
